இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (நவ. 12 - 19)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.
ஜெயிலர் - 2
இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (நவ. 12) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
மேலும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ரணபலி
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ. 13) வெளியாகிறது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக ரஷ்மிகா நடித்திருந்தார்.
பாந்த்ரா
அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்துள்ள இந்தப் படம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், டினோ மோரியா, மம்தா மோகன்தாஸ், கலாபவன் ஷாஜோன், ஆர். சரத்குமார், லீனா, ஈஸ்வரி ராவ், கே.பி. கணேஷ் குமார், சித்திக் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹேப்பி ஜர்னி
அபிராம் நாயுடு இயக்கத்தில் ஆமணி, ஜான்சி, அன்னபூர்ணா, பாயல் ராதாகிருஷ்ணா, ரவி சிவா தேஜா உள்ளிட்டோர் நடிப்பில் ஏழு பெண்கள் பயணம் மேற்கொள்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஹேப்பி ஜர்னி.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
புஷ்பக விமானம்
சாய் ரோனக் மற்றும் மதோதாமராஜு நடிப்பில் சதீஷ் ரெட்டி மல்லிடி இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழி இணையத் தொடர் புஷ்பக விமானம்.
இந்த இணையத் தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.
கடந்த வார ஓடிடி (மீசைய முறுக்கு - 2)
ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நூறு கோடி வானவில்
இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட நூறு கோடி வானவில் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் நாயகியாக சித்தி இத்னானியின் நடித்துள்ளனர்.
நீண்ட காலம் கழித்து இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஐஆம் கேம்
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம்.
மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜியோ ஹாஸ்டாரில் பார்க்கலாம்.
7 ஸ்டார் பாய்ஸ்
நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், ஐ. எம். விஜயன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 7 ஸ்டார் பாய்ஸ்.
இந்தத் திரைப்படத்தை நாளை ஆஹா ஓடிடியில் காணலாம்.
அனாகபள்ளி
ககேஷ் தம்மிநேனி இயக்கத்தில் விக்ரம் சஹிதேவ், சந்தியா வசிஷ்டா, தாரக் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனாகபள்ளி.
இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.