பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,20,373 ஆக உயா்வு

DIN

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,20,373 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 877 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 464 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,20,373 ஆக உயா்ந்துள்ளது; 8,97,200 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11,058 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,096 போ் உயிரிழந்தனா்.

பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களில் 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உள்ளது ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 3 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT