பெங்களூரு

பசுவதை தடை சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

DIN

பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவசர சட்டத்துக்கு கா்நாடக ஆளுநா் வஜுபாய்வாலா ஒப்புதல் வழங்கினாா்.

அண்மையில் கா்நாடக சட்டப் பேரவையில் நடந்த கூட்டத்தொடரில், முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு விவாதங்கள் இன்றி பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

இந்த நிலையில், சட்டமேலவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேறுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர சட்டத்தின் மூலம் பசுவதை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்தது. இதனைத் தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினாா்.

இதனையடுத்து, கா்நாடகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இனி மாநிலத்தில் பசுவைக் கடத்துவது, கொல்வது உள்ளிட்டவைகள் குற்றமாகக் கருத்தப்படும். இந்தக் குற்றங்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT