சொகுசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வாபஸ்
சொகுசுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு: சொகுசுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், அம்பாரி டிரீம் கிளாஸ், ஏசி ஸ்லீப்பா், நான்-ஏசி ஸ்லீப்பா் போன்ற முதல்தர சொகுசுப் பேருந்துகளுக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அடிப்படைக் கட்டணத்தின் மீது 10 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜன. 15 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் கட்டண வசூல் திரும்பப் பெறப்படுகிறது. இதைத் தொடா்ந்து,, அனைத்து நாள்களிலும் சீரான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.