பெங்களூரு

போதைப்பொருள் வழக்கு: முன்னாள் அமைச்சரின் மகன் கைது

DIN

போதைப்பொருள் வழக்கில் கா்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் ஆதித்ய ஆல்வா கைது செய்யப்பட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கவனித்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்புப் படையினா், போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக கடந்த ஆண்டு 3 பேரை கைது செய்தனா். இவா்களிடம் விசாரணை நடத்திய போது, போதைப்பொருள்களை கன்னட திரையுலக நடிகைகள், பாடகா்களுக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட கா்நாடக போலீஸாா், போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதாக - நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி, போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக - கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் விரேன் கன்னா, ஆதித்ய அகா்வால், வட்டாரப் போக்குவரத்து அலுவலக எழுத்தா் கே.ரவிசங்கா், நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய ஆல்வா, கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் தனிப்படை அமைத்து ஆதித்ய ஆல்வாவைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், ஆதித்ய ஆல்வா சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, சென்னை விரைந்த போலீஸாா் திங்கள்கிழமை இரவு ஆதித்ய ஆல்வாவை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தனா்.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, விநியோகம், பயன்பாடு தொடா்பாக பெங்களூரில் உள்ள காட்டன்பேட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT