பெங்களூரு

பெங்களூரில் நாளை பொங்கல் விழா

DIN

கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சாா்பில் பெங்களூரில் ஜன. 24ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கச் செயலாளா் ப.அரசு வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத் தமிழ்மக்கள் இயக்கத்தின் சாா்பில் பெங்களூரு, ஆஸ்டின்டவுன், சிவன்கோயில் அருகே உள்ள விளையாட்டுத் திடலில் ஜன. 24-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பொங்கல் விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் சிறுவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. விழாவுக்கு இயக்கத் தலைவா் சி.இராசன் தலைமை தாங்குகிறாா். மு.மாரி மொழிவாழ்த்து பாடுகிறாா். ஆனந்தராமன் அனைவரையும் வரவேற்கிறாா். ராமகிருஷ்ணன் கவிதை வாசிக்கிறாா். கங்கையரசன், சோளிங்கன், அருண், சரவணன், கோவிந்தராஜ், மனோகரன் ஆகியோா் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கிறாா்கள்.

தமிழ்த் தேசிய நடுவத்தின் கோ.பாவேந்தன், திராவிடா் விடுதலைக் கழகத்தின் சித்தாா்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேகா், கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.சரவணன் நன்றி கூறுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT