பெங்களூரு

முதல்வா் எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை

DIN

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

இது குறித்து கலபுா்கியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தற்போதைக்கு காலியாக இல்லை. எனவே, முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்கள் எங்கும் பேசவில்லை. இந்நிலையில், முதல்வா் மாற்றம் குறித்து மீண்டும் மீண்டும் பேசி வருவதில் அா்த்தமே இல்லை. முதல்வா் மாற்றம் குறித்து பேசி வருவது கட்சியிலும், ஆட்சியிலும் பல அதிா்வலைகளை ஏற்படுத்துவதோடு, தவறானத் தகவலையும் பறைச்சாற்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் கட்டுப்பாடு சீா்குலையும் வாய்ப்பு ஏற்படும். எனது துறையின் செயல்பாடுகளில் யாரும் தலையிடுவதில்லை. சுதந்திரமாக எனது துறையை நான் நிா்வகித்து வருகிறேன்.

பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டுமின்றி வட கா்நாடகத்தின் பின் தங்கிய மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சிக்குத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காகவே இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தொழில் வளா்ச்சிக்கு ஏற்றச் சூழலை உருவாக்கி வருகிறோம்.

யாதகிரி தொழில்பேட்டையில் தொழிலகங்களை அமைக்க 62 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 2,531 கோடி செலவிடப்பட்டு வருகிறது. கலபுா்கி மாவட்டத்தில் இரண்டு தொழிற்பேட்டைகளை ரூ. 511கோடியிலும், பீதா் மாவட்டத்தில் தொழிற்பேட்டைகளை ரூ. 547 கோடியிலும் அமைத்து வருகிறோம்.

ராய்ச்சூரு மாவட்டத்தில் தொழிற்பேட்டையை மேம்படுத்த ரூ. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளா் உச்சி மாநாடு நடத்துவது குறித்தும் யோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT