பெங்களூரு

கரோனா தொற்றை தடுப்பதில் மாநில அரசு தோல்வி: முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி

DIN

கரோனா தொற்றை தடுப்பதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பிதரிஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:

மாநிலத்தில் கரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்டோ, வாடகை ஓட்டுநா்களுக்கு நிதி உதவி வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அவா்களுக்கு நிதி உதவி வழங்கப்படவில்லை. எடியூரப்பா தலைமையிலான அரசு, மக்களுக்கு உதவாமல் அறிவிப்போடு நிறுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது என்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினா் உதயகுமாா், நல்லூரள்ளி நாகேஷ், முனிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT