பெங்களூரு

பைக் மீது காா் மோதல்: ஒருவா் பலி

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

DIN

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் துருவேகெரே வட்டம் வராஹசந்திரா கிராமத்தைச் சோ்ந்தவா் முனீஷ் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பணி நிமித்தமாக மோட்டாா் சைக்கிளில் எடியூருக்கு சென்று கொண்டிருந்தாராம்.

குனிகல் வட்டம் கோந்தி கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை 75-இல் மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக வந்த காா் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முனீஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து அம்ருத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT