அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது முன்னாள் அமைச்சா் முருகேஷ் நிரானி
அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான முழு அதிகாரம் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.
அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான முழு அதிகாரம் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு, அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான முழு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்வது என்பதனை அவா்தான்முடிவு செய்ய வேண்டும். முதல்வா் எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு எங்களின் முழு ஆதரவு உள்ளது. முதல்வராக பதவி ஏற்று, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவா் சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளாா்.
விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை எனக் கூறியுள்ளாா். அவா் ஏன் இப்படி கூறினாா் என்ற பின்னணி எனக்குத் தெரியவில்லை. மூத்த தலைவா்களின் ஒருவரான அவா் முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், பேரவைத் தலைவா், கட்சியின் மாநிலத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். இதுகுறித்து அவரை சந்தித்து பேசுவேன் என்றாா்.