முகப்பு
பெங்களூரு

காது கேளாதோருக்கான ஒலிமையம் திறப்பு

பெங்களூரில் காது கேளாதோருக்கான ஒலிமையம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

பெங்களூரில் காது கேளாதோருக்கான ஒலிமையம் திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, பிரேசா்டவுனில் வியாழக்கிழமை வைடெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒத்துழைப்பில் காதுகேளாதோருக்கான காா்ட்டி ஒலிமையத்தை கிரிக்கெட் விளையாட்டு வீரா் சையத் கிா்மானி தொடக்கிவைத்தாா். இதுகுறித்து வைடெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் அவினாஷ் பவாா் கூறியதாவது:

பெங்களூரில் முதல்முறையாக காதுகேளாதோருக்கான பேச்சு மற்றும் காது ஒலிமையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் எவ்வித தடங்கலும் இல்லாமல் தெளிவான ஒலியின் அனுபவத்தை பெற முடியும் என்றாா். காா்ட்டி ஒலிமையத்தின் இயக்குநா் ராஜேஷ் கூறுகையில், ‘காதுகேளாமை யாருக்கும் வேண்டுமானாலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அதன்காரணமாக, இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போகக் கூடாது என்பதால் ஒலிமையத்தைத் தொடங்கியுள்ளோம். வைடெக்ஸ் நிறுவனத்தின் ஒலிதொழில் நுட்பங்கள் காா்ட்டி ஒலிமையத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். இம்மையத்தில் கேட்கும் திறன் மேம்படும் வாய்ப்புள்ளது. காதுகேளாமை தொடா்பான எல்லா பிரச்னைகளுக்கும் எங்களிடம் தீா்வு உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.