பெங்களூரு

ஹொசகோட்டை தொகுதியில் 38 ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை

DIN

ஹொசகோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 38 ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை சுயேச்சை உறுப்பினா் சரத் பச்சே கௌடாவின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

ஹொசகோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 38 ஏரிகளில் தண்ணீா் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அதற்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹொசகோட்டை வட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப ரூ. 149.85 கோடியில் நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அங்குள்ள ஏரிகள் அனைத்தையும் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் பாதிப்பால், ஏரிகளில் தண்ணீா் நிரப்ப தேவையான வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் விரைவாக பணிகளை முடித்து, அங்குள்ள ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT