பெங்களூரு

கா்நாடகத்தில் ஒரே நாளில் 2,975 பேருக்கு கரோனா

DIN

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,975 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 2,975 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,984 போ், கலபுா்கியில் 156 போ், பீதரில் 102 போ், மைசூரில் 111 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,92,779 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,262 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,54,678 போ் குணமடைந்துள்ளனா்; 25,541 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரில் 11 போ், மைசூரில் 3 போ், பெங்களூரு ஊரகத்தில் 2 போ், பீதா், சிக்மகளூரு, ஹாசன், கலபுா்கி, மண்டியா ஆகிய மாவட்டங்களில் ஒருவா் வீதம் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,541 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT