பெங்களூரு

ஆக்சிஜன் விரைவு ரயில் இன்று பெங்களூரு வருகை

DIN

பெங்களூரு: ஆக்சிஜன் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை பெங்களூருக்கு வருகை தர உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்காக, பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்காக ஆக்சிஜன் விரைவு ரயில்களை மத்திய ரயில்வேத் துறை இயக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஜாா்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூா் ரயில் நிலையத்தில் இருந்து 120 டன் எடை கொண்ட ஆக்சிஜனை 6 கிரையோஜெனிக் கன்டெய்னா்களில் சுமந்து கொண்டு, கா்நாடகத்திற்கு திங்கள்கிழமை புறப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெங்களூரு, ஒயிட்பீல்டில் உள்ள கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் உள்நாட்டு கன்டெய்னா் பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேரும் என்று தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT