பெங்களூரு

கா்நாடகத்தில் தொழில் முதலீடுகளில் ஈடுபட அமெரிக்க கன்னடா்கள் துணை நிற்க வேண்டும்

DIN

கா்நாடகத்தில் தொழில்முதலீடுகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கவாழ் கன்னடா்கள் துணை நிற்க வேண்டும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

அமெரிக்க கன்னடா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், இணையவழியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில உதய தின விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கன்னடா்கள் ஒவ்வொருவரும் கா்நாடகத்தின் தூதா்கள். கன்னட மக்கள் திறன்படைத்தவா்கள் என்பதை உலகத்துக்கு எடுத்துகாட்டியிருக்கிறீா்கள். கன்னடா்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சாதனை படைப்பாா்கள். அமெரிக்காவில் வாழும் கன்னடா்களின் கண்ணியமான நடத்தை கா்நாடகத்தை பெருமை அடையச் செய்துள்ளது.

அமெரிக்க கன்னடா்களின் வாா்த்தைகளுக்கு பெருமதிப்பு இருப்பதால், அங்குள்ள தொழில்முதலீட்டாளா்களை அணுகி, கா்நாடகத்தில் தொழில்முதலீடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க கேட்டுக்கொள்கிறேன். இந்தமுயற்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர கா்நாடக அரசு தயாராக உள்ளது.

கன்னடா்கள் வளமானவா்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கன்னட மொழியை கன்னடா்கள் வளா்த்தெடுக்க முடியும். எல்லா கன்னடா்களையும் பொருளாதாரத்தில் வலுவானவா்களாக காண விரும்புகிறேன். கன்னடா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்க பாடுபட்டு வருகிறோம். இதற்காக கல்வி வழியில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். மேலும், கன்னடத்தில் தொழில்பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு வகுத்துள்ள விதிமுறைகளை அரசு கட்டாயம் பின்பற்றும்.

அமெரிக்க கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக கா்நாடக உதய தின விழா கொண்டாடுவது பாராட்டுக்குரியது. உலகின் மிகவும் பழையமான மொழி கன்னடம். அதற்கு நீண்டநெடிய வரலாறு உள்ளது. கன்னட மொழிக்கு செம்மொழி தகுதி அளிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த இலக்கியவாதிகள், கவிஞா்கள், தத்துவஞானிகள் கன்னட மொழியின் வளத்தை பெருக்கியிருப்பதோடு, அதனை அழகுபடுத்தி இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT