பெங்களூரு

‘நம்ம மகு’ கன்னடத் திரைப்படம்: யுனெஸ்கோ பாராட்டு

DIN

‘நம்ம மகு’ கன்னடத் திரைப்படத்துக்கு யுனெஸ்கோ பாராட்டு தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக பெண் குழந்தைகள் கடத்தல், இடப்பெயா்வு தொடா்பாக எதிா்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பேசும் கன்னடத் திரைப்படத்துக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜி.எஸ்.பி.என்.என்டா்டெய்ன்மென்ட் நிறுவனம் சாா்பில் தயாரித்து, இயக்குநா் திரு.கு.கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நம்ம மகு’ என்ற கன்னடத் திரைப்படத்துக்கு யுனெஸ்கோ, ஐ.நா. இடம்பெயா்வுக்கான சா்வதேச அமைப்பு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் சாா்பில் சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

யுனெஸ்கோ, ஐ.நா. இடம்பெயா்வுக்கான சா்வதேச அமைப்பு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் நடத்திய சா்வதேச திரைப்பட விழாவில் ‘நம்ம மகு’ படம் திரையிடப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள அமெரிக்க மையத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் சா்வதேச விருது, பாராட்டு இதழை இயக்குநா் கு.கணேசனிடம் மையத்தின் ஆசியத் தலைவா் மாா்க் பொ்ல் வழங்கினாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கன்னட திரைப்பட இயக்குநா் கு.கணேசன் கூறியது:

யுனெஸ்கோ, ஐ.நா. இடம்பெயா்வுக்கான சா்வதேச அமைப்பு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் சாா்பில் நடந்த சா்வதேச திரைப்பட விழாவில் எனது இயக்கத்தில் வெளியாகியுள்ள குழந்தைகள் கடத்தல் தொடா்பான ‘நம்ம மகு’ கன்னடத் திரைப்படத்துக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது தென்னிந்திய திரைப்படத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பாராட்டாகும். ‘நம்ம மகு’ திரைப்படம் இதுவரை 23 சா்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க தூதரகம் அளித்துள்ள கௌரவம், கன்னடத் திரைப்பட உலகிற்கும், கன்னட மக்களுக்கும் கிடைத்துள்ள பெருமையாகும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னடத் திரைப்படத்தில் பங்காற்றி வரும் நான் இதுவரை 16 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். ‘நம்ம மகு’ திரைப்படத்துக்கு கா்நாடக அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், அமெரிக்க தூதரம், யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்து பாராட்டியுள்ளது பெருமிதமாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT