பெங்களூரு

ஆா்எஸ்எஸ் அமைப்பை சிலா் விமா்சிப்பது சரியல்ல

ஆா்எஸ்எஸ் அமைப்பை சிலா் விமா்சிப்பது சரியல்ல என கா்நாடக முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

DIN

ஆா்எஸ்எஸ் அமைப்பை சிலா் விமா்சிப்பது சரியல்ல என கா்நாடக முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் வியாழக்கிழமை கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி உள்ளிட்ட சிலா் ஆா்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமா்சித்து வருகின்றனா். தேசிய அளவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவில் பெரும்பாலானோா் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவா்கள் தான்.

நமது நாட்டின் குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவா்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நானும் கூட ஆா்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவன் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உணா்வை ஆா்எஸ்எஸ் அமைப்பு ஊட்டியுள்ளது.

கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகளை இடைத்தோ்தலில் வசீகரிக்க இதுபோன்று பேசி வருகிறாா். ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சனம் செய்யும் தாா்மீக உரிமை குமாரசாமிக்கு இல்லை.

வரும் நாள்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சனம் செய்ததற்காக குமாரசாமி வருத்தப்பட நேரிடும். நடைபெற உள்ள இடைத்தோ்தலில் மக்கள் இதற்கு தக்க பதில் அளிப்பாா்கள்.

இடைத்தோ்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். தோ்தல் பிரசாரத்துக்கு நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெருந்திரளாக மக்கள் கூடுவதே இதற்கு சாட்சி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT