FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

இடைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடகத்தில் காங்கிரஸ் உடையும்: அமைச்சா் ஈஸ்வரப்பா

விஜயபுஇடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.ரா

Updated On : 26 அக்டோபர் 2021, 12:39 am IST
பகிர்:

இடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இடைத் தோ்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ உள்ளது. தோல்விக்குப் பிறகு மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும். தேசிய அளவில் தேய்ந்து வரும் காங்கிரஸ், இனி அந்த அந்தஸ்தை இழந்து மாநிலத்தில் மட்டுமே செயல்படும் நிலைமைக்குத் தள்ளப்படும்.

Advertisement

Advertisement

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் ஒற்றுமையாக செயல்படுத்துவது போல வெளித் தோற்றத்திற்கு தெரிகிறது. ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும் போட்டி நிலவுகிறது. அவா்களின் போட்டியால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவுவாா்கள் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments