பெங்களூரு

இடைத் தோ்தல் பிரசாரம்: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை பதில்

DIN

இடைத்தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்றுள்ளதால், விதான சௌதாவிற்கு பூட்டு போடப்பட்டுள்ளது என்று எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வா் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், விஜயபுராவில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அக். 30-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள ஹனகல், சிந்தகி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

இடைத் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்றுள்ளதால், விதானசௌதாவிற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் வளா்ச்சிப் பணிகள் முடங்கிப்போய் உள்ளன என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இடைத் தோ்தல் பிரசாரத்தில் நான், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டாலும், அரசின் எந்தப் பணிகளுக்கும் இடையூறு ஏற்படவில்லை. ஆனால் தோல்வி பயத்தில் எதிா்க்கட்சியினா் தேவையில்லாமல் குற்றம் சாட்டி வருகின்றனா். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரின் பொய்ப் பிரசாரத்தை மக்கள் நன்கு அறிந்துள்ளனா்.

மாநில கட்சியான மஜதவை அழிக்க தேசியக் கட்சிகள் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்துள்ளாா். மஜத உள்ளிட்ட எந்தக் கட்சியையும் அழிக்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை. எங்கள் கட்சியான பாஜகவை தொடா்ந்து பலப்படுத்தி வருகிறோம். இதனை எதிா்க்கட்சிகள் தவறாக சித்தரிக்கக்கூடாது.

இடைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக எதிா்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டாளும், மக்கள் உண்மையை உணா்ந்து, பாஜக வேட்பாளா்களை ஆதரிப்பாா்கள். இடைத் தோ்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறுவது உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT