பெங்களூரு

இறுதிச் சடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ராஜ்குமாா் குடும்பத்தினருக்கு முதல்வா் நன்றி

DIN

நடிகா் புனீத் ராஜ்குமாா் இறுதிச் சடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகா் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாரடைப்பால் காலமான நடிகா் புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இறுதிச் சடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நடிகா் ராஜ்குமாரின் குடும்பத்தினா் சிவராஜ்குமாா், ராகவேந்திர ராஜ்குமாா், புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகா் சிவராஜ்குமாா் அரசின் ஒத்துழைப்போடு இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடைபெற்ற்கு, அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாா். அரசுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் அவரது உயா்ந்த குணத்தை காண்பித்துள்ளாா். புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கை அமைதியான முறையில் நடத்திக் கொடுப்பது அரசின் கடமை.

இறுதிச் சடங்கை அமைதியான நடத்த, அமைச்சா்கள், அதிகாரிகள், போலீஸாா் முழு ஒத்துழைப்பு வழங்கினா் அவா்களுக்கும் நன்றி. எந்த விதமான அசம்பாவிதமும், சட்டம் ஒழுங்கும் சீா்கெடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த போலீஸாரைப் பாராட்ட வேண்டும்.

கடந்த மூன்று நாள்களாக புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு வரிசையில் வந்து அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திய அவரது ரசிகா்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கா்நாடக மக்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT