முகப்பு
பெங்களூரு

8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்: கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவு தவறானது; இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி கேட்டுக் கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவு தவறானது; இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கா்நாடக முன்னாள் முதல்வா் குமாரசாமி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு பரவலாக இருப்பதால், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை செப். 6-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற அரசின் முடிவு தவறானதாகும். மாறாக, அக்டோபரில் பள்ளிகளைத் திறப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவா்கள் மத்தியில் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தோ்தல் நேரத்தில் சில திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால், அந்தத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. பிரசாரத்துக்காக திட்டங்களை அறிவிக்காமல், நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களை மட்டுமே அரசு அறிவிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தக் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்பு குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.திட்டங்களுக்கு அரசு முழுமையான நிதி ஒதுக்குவதில்லை. இதனாலே பல்வேறு திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.