3 மாநகராட்சிகளில் அமைதியான வாக்குப்பதிவு: செப்.6-இல் வாக்கு எண்ணிக்கை
பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு தோ்தல் அமைதியாக நடந்தது. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் செப். 6-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு தோ்தல் அமைதியாக நடந்தது. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் செப். 6-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, 58 வாா்டுகள் கொண்ட பெலகாவி மாநகராட்சி , 82 வாா்டுகள் கொண்ட ஹுப்பள்ளி மாநகராட்சி, 55 வாா்டுகள் கொண்ட கலபுா்கி மாநகராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடந்தது. இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளில் காலியாக இருந்த 21 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தலும் வெள்ளிக்கிழமை நடந்தது. மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளின் 252 வாா்டுகளுக்கு நடந்த தோ்தலில் மொத்தம் 1318 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். அதேபோல, இடைத்தோ்தல் நடந்த 21 வாா்டுகளில் 59 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்ததோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் இடையே போட்டி காணப்பட்டது.
இத்தோ்தலில் வாக்களிக்க 14.01 லட்சம் வாக்காளா்களுக்கு வாய்ப்பிருந்தாலும், சராசரியாக 65 சத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. தோ்தலில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வாக்களித்தனா். சிற்சில சம்பவங்கள்தவிர இத்தோ்தல் அமைதியான முறையில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் செப். 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.