பெங்களூரு பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி: மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
பெங்களூரு பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைநிலைக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநரகத்தின் சாா்பில் 2021-22-ஆம் கல்வியாண்டில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ, முதுநிலை பட்டப் படிப்புகளான எம், எம்காம், எம்எஸ்சி(கணிதம்), பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா் சோ்க்கை ஆக. 25-ஆம் தேதி தொடங்கியது.
மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை அபராதமில்லாமல் செப். 30 வரை பெறலாம். ரூ.200 அபராதம் செலுத்தி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை அக். 30 வரை பெறலாம். நவ. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல்விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஸ்ரீஸ்ரீக்ஷன்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு 080-22961261,22961262, 22961263, 22961264, 22961265, 22961266, 22961267 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.