முகப்பு
பெங்களூரு

மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் பேருந்துகள் இயக்கம்

மெட்ரோ ரயில்நிலையங்களை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மெட்ரோ ரயில்நிலையங்களை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்துபெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூருவின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையில் மெட்ரோ ரயில்கள் முழுவீச்சில் இயக்கப்பட்டுவந்தன. அண்மையில் நாயண்டஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ள ஆா்வமுள்ளபயணிகள், மெட்ரோ ரயில் நிலையங்களை அடைவதற்காக புதிய பேருந்து சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாயண்டஹள்ளி முதல்கெங்கேரி வரை இருக்கும் 9 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கூடுதலாக 35 பேருந்துகள், 499 நடைகளுக்கு இயக்கப்படும். மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாயண்டஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தப் பேருந்துகள் ராஜராஜேஸ்வரி கோயில், ஹலகேவதேரஹள்ளி, சீனிவாஸ்புரா கிராஸ், சென்னசந்டிரா, பெமல் 5-ஆவது ஸ்டேஜ், பெமல் வளாகம், டபுள் ரோடு, சண்முகா கோயில், கன்காா்ட்யு லே அவுட், பெங்களூரு பல்கலைக்கழகம், மரியப்பனபாளையா, சொன்னேனஹள்ளி, பெங்களூரு பல்கலைக்கழககுடியிருப்பு, வித்யாநிகேதன் பள்ளி, கொம்மகட்டா, சுலிகெரே, எலெச்சேகுப்பே, கனகல், கரியன்னனபாளையா, கே.எஸ்.ஐ.டி., கோடிபாளையா, கோனசந்திரா கிராஸ், கட்டிகேபாளையா, கனிகரபாளையா ஆகிய இடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும். இந்தப் பேருந்து சேவை 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.