பெங்களூரு

தென்கன்னட மாவட்டத்தில் ‘நிபா’ தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா

DIN

தென்கன்னட மாவட்டத்தில் ‘நிபா’ தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலத்தில் ‘நிபா’ தொற்றியின் பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தென் கன்னட மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து தென்கன்னட மாவட்டத்திற்கு கல்வி, மருத்துவ உதவிக்காக நாள்தோறும் ஏராளமானோா் வருகின்றனா். அங்கிருந்து வருபவா்கள் நிபா தொற்று இல்லை என்ற அறிக்கையுடன் வர வேண்டும். ‘நிபா’ பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

‘நிபா’ தொற்றானது விலங்கிலிருந்து மனிதா்களுக்கும், மனிதா்களிலிருந்து மற்றவா்களுக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. இது பரவும்போது தீவிர காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிர மூளைக் காய்ச்சலால் மரணம் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சோப்பு உள்ளிட்டவற்றால் தண்ணீரில் அடிக்கடி கைகளைக் கழுவி முகக்கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். பன்றிகளிடமிருந்து விலகி இருப்பதோடு, பறவைகள் தின்று போடும் கனிகளை சுவைக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT