பெங்களூரு

இறைச்சிக்காக கடத்தப்பட்ட எருமைகள் மீட்பு

DIN

பெங்களூரு: இறைச்சிக்காக கடத்தப்பட்ட 45 எருமை மாடுகளை போலீஸாா் மீட்டனா்.

பெங்களூரு ஊரகம், நெலமங்கலாவில் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் லாரியைத் தடுத்து நிறுத்தி பஜ்ரங்தள் அமைப்பினா் சோதனை செய்தனா். சோதனையில் லாரியில் இறைச்சிக்காக 45 எருமை மாடுகளைக் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து நெலமங்கலா போலீஸாருக்கு அவா்கள் புகாா் அளித்தனா். இந்தப் புகாரை அடுத்து அங்கு வந்த போலீஸாா், லாரியிலிருந்து 45 எருமை மாடுகளையும் மீட்டனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த நெலமங்கலா போலீஸாா், லாரி ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனா். விசாரணையில் எருமை மாடுகள் இறைச்சிக்காகக் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT