பெங்களூரு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு‘நிபா’ பாதிப்பு இல்லை

DIN

மங்களூரு: சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு ‘நிபா’ தீநுண்மிப் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்கன்னட மாவட்டம் மணிப்பாலில் செவ்வாய்க்கிழமை ‘நிபா’ தீநுண்மி தாக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கோவாவில் பணிபுரியும், காா்வாரைச் சோ்ந்த ஒருவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது ரத்த மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தீநுண்மியியல் மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பரிசோதனையில் அவருக்கு ‘நிபா’ தீநுண்மி பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி கிஷோா்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT