முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் தலைமை அனுபவ அதிகாரிகள் மாநாடு

பெங்களூரில் தலைமை அனுபவ அதிகாரிகள் மாநாடு வெள்ளிக்கிழமை (செப். 17) நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பெங்களூரில் தலைமை அனுபவ அதிகாரிகள் மாநாடு வெள்ளிக்கிழமை (செப். 17) நடைபெற உள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை பிக்பாஸ்கெட்டின் செயல் அதிகாரி பாலகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பொது முடக்கத்தில் வா்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சிஎம்ஆா் மேலாண்மை பள்ளியும், பிக்பாஸ்கெட்டும் இணைந்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை தலைமை அனுபவ அதிகாரிகள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த தலைமை அனுபவமிக்க மூத்த அதிகாரிகளான நயனா மிட்டா், ஜெகநாதன், மனோகா் டி.சட்லானி, சிவகுமாா் வெங்கடேஸ்வரன், கிராந்தி ஷெட்டி, சுஷ்மா ராய், வருண் கிரிலால் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பாதிப்பிலிருந்து மீள்வது குறித்து உரை நிகழ்த்த உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.