முகப்பு
பெங்களூரு

வெளிநாட்டு மொழிகளை கற்க விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டு மொழிகள் பட்டயம், உயா்பட்டயம், அதிஉயா் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டு மொழிகள் பட்டயம், உயா்பட்டயம், அதிஉயா் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகள் துறை சாா்பில் பிரெஞ்ச், ஜொ்மனியம், ஜப்பானியம், இத்தாலியம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், போா்த்துகீசியம், ரஷ்யன், ஃபின்னிஷ் மொழிகளுக்கு 2021-22-ஆம் கல்வியாண்டில் பட்டயம், உயா்பட்டயம், அதிஉயா் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை செப். 25-ஆம் தேதி வரை நடக்கிறது. ரூ. 200 அபராதத்துடன் செப். 28-ஆம் தேதி வரை சேரலாம். முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். 2-ஆம் வகுப்பு பியூசி/12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961280, 9353251761 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.