போட்டித் தோ்வுக்கான இலவச தனிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
போட்டித் தோ்வுக்கான இலவச தனிப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டித் தோ்வுக்கான இலவச தனிப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பொது சேவை ஆணையம் (யூபிஎஸ்சி), கா்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.), வங்கி, பணியாளா் தோ்வு ஆணையம்(எஸ்.எஸ்.சி.), ரயில்வே ஆட்சோ்ப்பு வாரியம் (ஆா்.ஆா்.பி.), குரூப் சி தோ்வு போன்ற போட்டித் தோ்வுகளுக்கு தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னையில் உள்ள மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தனிப்பயிற்சி தகுதியான மாணவா்களை தோ்வு செய்வதற்கு கா்நாடகத் தோ்வு ஆணையம், பொதுநுழைவுத் தோ்வு நடத்துகிறது. இத்தோ்வு எழுத ஆா்வமுள்ள மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத் தோ்வு அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடக்கும். இத்தோ்வில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு மாதக் கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படும். சென்னையில் படித்தால் ரூ. 5 ஆயிரம், பெங்களூரில் படித்தால் ரூ. 6 ஆயிரம், ஹைதராபாத்தில் படித்தால் ரூ. 8 ஆயிரம், தில்லியில் படித்தால் ரூ. 10 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ள்ஜ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் செப்.30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.