லாரி கிடங்கு வெடி விபத்தில் மேலும் ஒருவா் பலி
லாரி கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
லாரி கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
பெங்களூரு, நியூ தரகுபேட்டை பகுதியில் உள்ள லாரி கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் மனோகரன், அஸ்லம் பாஷா ஆகியோா் உயிரிழந்தனா். இந்த நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுநாத், ஜேம்ஸ், கணபதி, அங்குசாமி ஆகியோரில், சிகிச்சை பலனின்றி அங்குசாமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வி.வி.புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.