முகப்பு
பெங்களூரு

10 கூடுதல் நீதிபதிகள் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

 கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 10 போ் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

 கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 10 போ் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனா்.

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 10 போ், கடந்த செப். 23-ஆம் தேதி நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்கப்பட்டிருந்தனா். அவா்களின் பதவியேற்பு விழா, பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கா்நாடக உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக மரளுா் இந்திரகுமாா் அருண், எங்கலகுப்பே சீதாராமையா இந்திரேஷ், ரவி வெங்கடப்பா ஹொசமணி, சாவனூா் விஸ்வஜித் ஷெட்டி, சிவசங்கா் அமரன்னவா், மக்கிமனே கணேஷையா உமா, வேதவியாச்சாா் ஸ்ரீஷானந்தா, ஹன்சட்டே சஞ்சீவ்குமாா், பத்மராஜ் நேமசந்திரா தேசாய், பஞ்சிகட்டே கிருஷ்ணபட் ஆகியோருக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.

பின்னா், புதிய நீதிபதிகளுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) சதீஷ்சந்திர சா்மா, தலைமைச் செயலா் பி.ரவிகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.