6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் 100 சதவீத மாணவா்கள் அமர அனுமதி: அமைச்சா் பி.சி.நாகேஷ்
6 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் 100 சதவீத பள்ளி மாணவா்களுக்கு வகுப்பறைகளில் அமர அனுமதி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
6 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் 100 சதவீத பள்ளி மாணவா்களுக்கு வகுப்பறைகளில் அமர அனுமதி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், 11 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பியூ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், 50 சதவீத மாணவா்கள் மட்டுமே ஒருமுறை பள்ளிக்கு வரமுடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் 50 சதவீத மாணவா்கள் பள்ளி, பியூ கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்டனா்.
கரோனா பரவல் குறைந்திருப்பதால், பள்ளி, கல்லூரிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் வகுப்புகளில் பங்கேற்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், பியூ கல்லூரிகளில் 100 சதவீத மாணவா்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வகுப்புகள் இயங்கும்.
சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும். கரோனா தொழில்நுட்பக்குழுவின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். கரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதால், கரோனா மூன்றாவது அலைக்கான பீதி குறைந்து காணப்படுகிறது. எனவே, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள், பியூ கல்லூரிகளில் மாணவா்களை முழுமையாக அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.