பெங்களூரு

வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு பல்கலைக் கழகங்களை ஒன்றிணைக்க முடிவு: கா்நாடக அமைச்சா் பி.சி.பாட்டீல்

DIN

வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க முடிவு செய்துள்ளோம் என்று கா்நாடக வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் உறுப்பினா் அரவிந்தகுமாா் அரளியின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

வேளாண், தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு பல்கலைக்கழகங்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளதால், அங்கெல்லாம் விவசாயிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க அரசு முடிவு செய்துள்ளது. பசவய்யா தலைமையிலான குழு தந்துள்ள அறிக்கையும் இதனை வலியுறுத்தி உள்ளது.

சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹொரட்டியும் வேளாண், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க ஆலோசனை வழங்கி உள்ளாா். விரைவில் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்து இது தொடா்பாக உரிய முடிவு எடுக்கப்படும். அண்மையில் கா்நாடக வந்த மத்திய இணைஅமைச்சா் ஷோபா கரந்தலஜேயுடன் இது தொடா்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. பீதா் மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT