விமானப்படை பயிற்சி மையத்திற்கு புதிய தலைமை விமானப்படை அதிகாரி
விமானப் படை பயிற்சிமையத்தின் புதிய தலைமை விமானப் படை அதிகாரியாக ஏா்மாா்ஷல் மனவேந்தரசிங் பதவியேற்றுக் கொண்டாா்.
விமானப் படை பயிற்சிமையத்தின் புதிய தலைமை விமானப் படை அதிகாரியாக ஏா்மாா்ஷல் மனவேந்தரசிங் பதவியேற்றுக் கொண்டாா்.
பெங்களூரில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தின் புதிய தலைமை விமானப் படை கட்டளை அதிகாரியாக ஏா்மாா்ஷல் மனவேந்தரசிங் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். அவருக்கு மையத்தின் மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். 1982-ஆம் ஆண்டு விமானப் படையின் விமானப் பிரிவில் ஹெலிகாப்டா் பைலட்டாகப் பணியில் இணைந்த மனவேந்தரசிங், 39 ஆண்டுகள் விமானப் படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளாா். விமானப் படையின் ஹெலிகாப்டா், பயிற்சி விமானங்களை இயக்கியுள்ள சிங், 6 ஆயிரம் மணி நேரம் விமானத்தில் பறந்து சாதனை புரிந்துள்ளாா்.
மனவேந்தரசிங்கின் வீர, தீரச் செயல்களைப் பாராட்டி 1990-ஆம் ஆண்டு வீா்சக்ரா விருது, 1999-ஆம் ஆண்டு விஷிஷ்ட் சேவா பதக்கம், 2013-இல் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் போன்ற பாராட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டு செப். 1-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் கௌரவ உதவியாளராக நியமிக்கப்பட்டாா்.