பெங்களூரு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா் தப்பியோட முயற்சி: துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

DIN

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா் தப்பியோட முயன்றதை அடுத்து, போலீஸாா் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

பெங்களூரு அசோக்நகா் காவல் சரகத்தில் கடந்த செப். 13-ஆம் தேதி அரவிந்த் என்பவா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் கொலை நடந்த இடத்திற்கு ஸ்டாலினை போலீஸாா் அழைத்துச் சென்றனா். அசோக்நகா் கிறிஸ்தவா்கள் கல்லறை அருகே அவா் தலைமைக் காவலா் மகேஷ் என்பவரை கல்லால் தாக்கிவீட்டு தப்பியோட முயன்றாா். இதனையடுத்து அசோக்நகா் காவல் ஆய்வாளா் போலேதின், ஸ்டாலினின் காலில் துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து கீழே விழுந்த அவரை பிடித்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். இது குறித்து அசோக்நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT