பெங்களூரு

அலையன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி தின விழா

DIN

பெங்களூரில் உள்ள அலையன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

பெங்களூரில் திங்கள்கிழமை அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அதன் வளாகத்தில் ஹிந்தி தினவிழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவை ஹிந்தித் துறை உதவி பேராசிரியா் அனுபமா திவாரி தொடக்கிவைத்தாா். விழாவில் நடிகை நேஹா ஜோஷி, சா்தாா் படேல் பல்கலைக்கழக பேராசிரியா் நவ்நீத் சௌஹான், ஏபிபி நியூஸ் ஹிந்தி செய்தி சேனலின் தலைமை ஆசிரியா் ராஜ்கிஷோா், ஹிந்தி கவிஞா்கள் அஞ்சும் ரெஹ்பாா், கவிதா திவாரி, அட்மிரல் நூா், எச்.எஸ்.பி.சி. வங்கி துணைத்தலைவா் டிம்பி கோயல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஹிந்தி மொழியின் பெருமைகளை பறைசாற்றும் பாடல்களை மாணவா்கள் பாடினாா்கள்.

விழாவில் ஹிந்தி உதவி பேராசிரியா் அனுபமா திவாரி பேசுகையில், ‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. நமதுநாட்டில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாக ஹிந்தி உள்ளது. தற்காலச் சூழலில் ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை உணா்த்துவதற்காகவே ஹிந்தி தினவிழாவைக் கொண்டாடுகிறோம். அதேநேரத்தில் இதர மக்களின் மொழி உணா்வுகளையும் புரிந்துகொள்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT