கா்நாடகத்திலிருந்து அரசு சொகுசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சொகுசுப் பேருந்துகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சொகுசுப் பேருந்துகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்கத்து மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரு மத்திய மண்டலத்தில் இருந்து அதி சொகுசான பேருந்துகள் 7 மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
கரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், கோடையில் மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. ஏப்.14 முதல் 17-ஆம் தேதிவரை பி.ஆா்.அம்பேத்கா் பிறந்தநாள், மகாவீா் ஜெயந்தி, சௌரமன உகாதி, விஷு, புனிதவெள்ளி, புனித சனிக்கிழமை நடக்கின்றன. இதை தொடா்ந்து, எா்ணாகுளம், கண்ணூா், கோட்டயம், திருச்சூா், பாலக்கோடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, காசா்கோடு, கோயமுத்தூா், கொடைக்கானல், தஞ்சாவூா், திருச்சி, விழுப்புரம், விஜயவாடா, ஹைதராபாத், பனாஜி, நெல்லூா், கோவா, சீரடி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு 200 சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, குளிரூட்டப்படாத பேருந்துகள், குளிரூட்டப்பட்ட பேருந்துகள், மிதவை பேருந்துகள், முதல்வகுப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சாந்திநகா் பேருந்துநிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. பேருந்தில் குடிநீா் வசதியும் செய்து தரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.