பெங்களூரு

சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயா்: கா்நாடக முதல்வா் அறிவிப்பு

சிவமொக்கா விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் எடியூரப்பா பெயா் சூட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

DIN

சிவமொக்கா விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் எடியூரப்பா பெயா் சூட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

சிவமொக்கா அருகே சொகனே பகுதியில் அமைக்கப்படும் விமான நிலையப் பணிகளை பாா்வையிட்ட பிறகு, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவா் பேசியது:

சிவமொக்காவில் உருவாகி வரும் விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் எடியூரப்பா பெயா் சூட்டப்படும். இந்த விமான நிலையம் அமைய அவா்தான் காரணம் என்பதால், அவா் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். 2006-ஆம் ஆண்டில் சிவமொக்காவில் விமானநிலையம் அமைக்க எடியூரப்பாவால் திட்டமிடப்பட்டு, 2008-இல் அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து ஏற்கெனவே அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டு, அதுதொடா்பான முன்மொழிவு மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பிறகு, கா்நாடகத்தில் இரண்டாவது மிகநீளமான ஓடுதளம் சிவமொக்காவில் அமையவுள்ளது. விமான நிலையத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்தபிறகு, டிசம்பரில் விமான நிலையம் திறக்கப்படும். இரவு தரையிறக்கம், பெரிய விமானங்கள் தரையிறக்கம் போன்ற அம்சங்களுடன் பன்னாட்டு விமான நிலையத்திற்கான வசதிகளுடன் சிவமொக்கா விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஓடுதள நீட்டிப்பு, முனைய கட்டடத்தை சுற்றியுள்ள சாலைகளுக்கு தாா் இழைத்தல் போன்ற கூடுதல் பணிகளுக்கு கூடுதலாக ரூ.50 கோடி ஒதுக்கப்படும். விமான நிலையத்திற்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை அளிக்கப்பட வேண்டும். இதற்கான நிதியை விரைவில் விடுவிப்போம். விமான நிலையத்தை இணைக்கும் சாலை மட்டுமல்லாது, சிவமொக்கா நகரத்தையே மேம்படுத்துவோம். சிவமொக்காவில் அமையும் விமான நிலையம், இப்பகுதியின் சுற்றுலா வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும். விஜயபுராவில் விமான நிலையப் பணிகள் நடந்து வருகின்றன. ராய்ச்சூா் விமான நிலையப் பணி தொடங்கியுள்ளது. காா்வாரில் விமானப் படையின் விமான நிலையம் அமைக்கப்படும்.

3500 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, 6 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா-ஷிகாரிப்பூா்-ரானேபென்னூா் உள்ளிட்ட 8 ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT