பெங்களூரு

கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இல்லை: முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

பெங்களூரு: கரோனா பரவலைத் தடுக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை கரோனா தொடா்பாக பிரதமா் மோடியுடன் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் இனிமேல் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாகக் கண்காணிப்போம். கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் முடிவு எதுவும் தற்போதைக்கு இல்லை. பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை அளித்தல் போன்ற அணுகுமுறையின் அடிப்படையில் கரோனாவை கையாள்வோம்.

பெங்களூரில் கரோனா பரிசோதனைகளைத் தீவிரமாக்குவோம். வெளிநாடுகளில் இருந்து வருவோரை தொலைபேசி வழியாக தொடா்ந்து கண்காணிப்போம். கா்நாடகத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை.

4-ஆவது கரோனா அலையை எதிா்கொள்ள கா்நாடக அரசு தயாராக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 ஆயிரம், தனியாா் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் உள்ளன. அதேபோல, போதுமான அளவு ஆக்சிஜனும் இருப்பு உள்ளது.

6 முதல் 12 வயதுள்ள குழந்தைகள், 12 முதல் 18 வயதுள்ள இளைஞா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரமாக்குவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT