பெங்களூரு

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை: முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

மே 3-ஆம் தேதி கா்நாடகம் வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அமைச்சரவையை விரிவாக்க வேண்டுமென்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் உணா்வுகளை நான் மதிக்கிறேன். அவா்களின் உணா்வுகளை பாஜக தேசியத் தலைவா்களிடம் தெரிவித்துவிட்டேன். அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மே 3-ஆம் தேதி பெங்களூருக்கு வருகை தரவிருக்கிறாா். அந்த சந்தா்ப்பத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவரிடம் பேசுவதற்கு முயற்சிப்பேன்.

அனைத்து மாநில முதல்வா்கள், தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள புதுதில்லிக்கு செல்கிறேன். சனிக்கிழமை மாலை பிரதமா் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறேன். ஞாயிறு காலை பெங்களூருக்கு திரும்புகிறேன். எனவே, புதுதில்லியில் எந்த மத்திய அமைச்சரையும், பாஜக தேசியத் தலைவரையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT