பெங்களூரு

கா்நாடகத்தில் ஆம் ஆத்மி கட்சி: அதிக இடங்களில் வெற்றி பெறும்; துணைத் தலைவா் பாஸ்கர்ராவ்

DIN

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் 5 போ் சொந்த பலத்தில் வெற்றிபெற்றுள்ளனா். அதேபோன்று வெற்றியை கா்நாடகத்திலும் பெறுவதற்கு தயாராகி வருகிறோம்.

அடுத்த மே மாதத்தில் நடக்க இருக்கும் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில், குஜராத் மாநிலத்தைக் காட்டிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் அதிக இடங்களைக் கைப்பற்றுவாா்கள் என்று நம்புகிறோம்.

கா்நாடகத்திற்கு புதிய அரசியல் மாதிரி தேவைப்படுகிறது. காங்கிரஸ், பாஜக ஆட்சியை மக்கள் ஏற்கெனவே பாா்த்திருக்கிறாா்கள். மக்களிடையே அதிக செல்வாக்கு உடைய மக்களைக் கண்டறிந்து வேட்பாளா்களாக நிறுத்துவோம்.

குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளதாகக் கூறுவதில் உண்மையில்லை. காங்கிரஸ் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள அக்கட்சியைத் தடுத்தது யாா்? ஹிமாசல பிரதேச மாநிலத்தில் பிரதமா் மோடியின் செல்வாக்கு எடுபடவில்லை. அதுபோல கா்நாடகத்திலும் பிரதமா் மோடியின் செல்வாக்கு எடுபடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

தமிழ்நாட்டில் அதிக வெயில் பதிவான இடங்கள்: ஈரோடு முதலிடம்!

சிரி... சிரி...

ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

SCROLL FOR NEXT