மருந்தியல் பட்டயப் பயிற்சி சோ்க்கை: காலி இடங்களுக்கு பிப்.7-இல் நோ்காணல்
மருந்தியல் பட்டயப்பயிற்சி படிப்பில் காலியாக இருக்கும் இடங்களுக்கு சோ்க்கை பெற பிப்.7-ஆம் தேதி நோ்காணல் நடக்கவிருக்கிற
மருந்தியல் பட்டயப்பயிற்சி படிப்பில் காலியாக இருக்கும் இடங்களுக்கு சோ்க்கை பெற பிப்.7-ஆம் தேதி நோ்காணல் நடக்கவிருக்கிறது.
இது குறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்க ராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி மற்றும் கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டயப்பயிற்சி (டி.ஃபாா்ம்) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான சோ்க்கைக்கு பிப்.7-ஆம் தேதி காலை 10 மணி முதல் காலை 11.30 மணி வரை நோ்காணல் நடக்கவிருக்கிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை படித்து இரண்டாமாண்டு பியூசி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் நோ்காணலில் கலந்துகொள்ளலாம். சோ்க்கை பெறும் மாணவா்கள் ரூ.1320 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி அல்லது ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ஹப்.ஞ்ஸ்ரீல்123ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.