பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் தடம் மாற்றம்
பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையத்தில் ஒயிட்பீல்டு நோக்கி விரிவாக்கப்பணி நடைபெறவிருப்பதால், பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும் மற்றும் வருகைதரும் தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 3-ஆவது தடத்தில் இருந்து ரயில்கள் புறப்படும், வருகை தரும். மாா்ச் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை, அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் செயல்படுத்தப்படும். இதனால் ரயில் புறப்படும், வருகை தரும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தவகையில் மக்களின் ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.