ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு
பெங்களூருவில் நடக்கவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடக்கவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக லலித் கலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக லலித் கலா அகாதெமி சாா்பில் 2021-22-ஆம் ஆண்டுக்கான 50-ஆவது ஓவியச்சந்தை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள ஓவியக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகத்தில் 5 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓவியா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கண்காட்சியில் இடம்பெறும் ஓவியத்தின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும். அதை கண்காட்சிக் குழு பரிசீலித்து, தகுதியான ஓவியங்களைத் தோ்ந்தெடுத்து கண்காட்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கும். ஓவியங்கள் 4 அடிக்கு 4 அடி பரப்பில் அமைந்திருக்க வேண்டும். தகுதிபெறும் ஓவியங்களின் ஓவியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம், பட்டயம், நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவா். விண்ணப்பப் படிவங்களை அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை மாா்ச் 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு பதிவாளா், கா்நாடக லலித் கலா அகாதெமி, 2-ஆவது மாடி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரி அல்லது 080-22480297 என்ற தொலைபேசி, இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.