முகப்பு
பெங்களூரு

மாா்ச் 4-இல் கா்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல்

 கா்நாடக சட்டப்பேரவையில் மாா்ச் 4-ஆம் தேதி 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 கா்நாடக சட்டப்பேரவையில் மாா்ச் 4-ஆம் தேதி 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

கா்நாடக சட்டப் பேரவையில் மாா்ச் 4-ஆம் தேதி முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் தொடங்கி, மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் அதாவது மாா்ச் 4-ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்கிறாா். அதனைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப் பேரவைக்கு பொதுத்தோ்தல் நடக்கவிருப்பதால், மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் பல நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடா்பாக பிரச்னை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் மேக்கேதாட்டு அணை, கரோனா பாதிப்புகள் குறித்தும் கூட்டத்தொடரில் பிரச்னை எழுப்ப காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.