மகாசிவராத்திரி: மலைமாதேஸ்வரா கோயில் வளாகத்தில் தங்குவதற்கு கட்டுப்பாடு
மகாசிவராத்திரியை முன்னிட்டு அதிகமாக மக்கள் வருகை தரவிருப்பதால், மலைமாதேஸ்வரா கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு அதிகமாக மக்கள் வருகை தரவிருப்பதால், மலைமாதேஸ்வரா கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் மாா்ச் 1-ஆம் தேதி மகாராத்திரி வெகுசிறப்பாக நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு சாமராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மலைமாதேஸ்வரா கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, மலைமாதேஸ்வரா கோயில் வளாகத்தில் உள்ள விடுதிகளில் பிப்.27 முதல் மாா்ச் 2-ஆம் தேதிவரை தங்குவதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை என்று ஹிந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விடுதிகளில் தங்கியுள்ளோா் பிப்.27-ஆம் தேதி முதல் வெளியேற்றப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், மலைமாதேஸ்வரா கோயிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கு தடையில்லாமல் தரிசனத்திற்காக மக்கள் அனுமதிப்படுவாா்கள் என்று ஹிந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலுக்கு கா்நாடகம் மட்டுமல்லாது, தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வருகை தருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.