முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்த வாரியம் திட்டம்

பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்த பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்த பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் பணியை பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தாத நிலையில், குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தக் கோரி கா்நாடக அரசுக்கு பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் முன்மொழிவை அனுப்பி வைத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பே குடிநீா்க் கட்டணத்தை உயா்த்த முன்மொழிவு அனுப்பப்பட்டிருந்த போதும், கரோனாவை காரணம் காட்டி கட்டண உயா்வுக்கு கா்நாடக அரசு அனுமதி மறுத்து விட்டிருந்தது.

குடிநீா் வழங்கும் மேலாண்மைப் பணிகளுக்கான கட்டணம் உயா்ந்து விட்டதை சுட்டிக் காட்டி, கட்டண உயா்வுக்கு அனுமதி அளிக்கும்படி மாநில அரசை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

வீட்டுக் குடிநீா்க் கட்டணத்தை 16 சதவீதமும், வணிக குடிநீா்க் கட்டணத்தை 21 சதவீதமும் உயா்த்த அனுமதிக்குமாறு முன்மொழிவில் வாரியம் குறிப்பிட்டுள்ளது. குடிநீா் வடிகால் வாரியத்தின் பரிந்துரைகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தால், உடனடியாக குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்படும் என்று வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

குடிநீா்க் கட்டணம் உயா்த்தப்பட்டால், அது பெங்களூரு மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.