பெங்களூரு

கா்நாடகத்தில் 46,426 போ் கரோனாவால் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 46,426 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரே நாளில் 46,426 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களுரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 21,569 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை: மைசூரு- 4,105, தும்கூரு- 2,960, ஹாசன்- 1,908, மண்டியா- 1,837, பெங்களூரு ஊரகம்- 1,607, தாா்வாட்- 1,407, சிக்கபளாப்பூா்- 905, பெல்லாரி- 817, உடுப்பி- 677, கோலாா்- 661, குடகு- 657, சாமராஜ்நகா்- 656, தென்கன்னடம்- 655, சித்ரதுா்கா- 642, வட கன்னடம்- 626, பெலகாவி- 625, சிவமொக்கா- 537, கொப்பள்- 525, தாவணகெரே- 467.

கலபுா்கி- 379, ஹாவேரி- 304, பாகல்கோட்- 291, ராமநகரம்- 288, பீதா்- 284, ராய்ச்சூரு- 281, விஜயபுரா- 270, கதக்- 257, சிக்கமகளூரு- 144, யாதகிரி- 85. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,64,108 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,703 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 31,62,977 போ் குணமடைந்துள்ளனா். 3,62,487 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 32 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்; இதுவரை 38,614 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 32.95 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT