பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 38,083 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,083-ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 38,083 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,717 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு-2,587, மண்டியா-1,802, தும்கூரு-1,584, ஹாசன்-1,452, தாா்வாட்-1,155, பெங்களூரு ஊரகம்-1,091, உடுப்பி-948, கலபுா்கி-812, சாமராஜ்நகா்-763, குடகு-707, தென்கன்னடம்-678, சிக்கபளாப்பூா்-665, பெல்லாரி-651, சிவமொக்கா-626, கோலாா்-572, வடகன்னடம்-567, கொப்பள்-500, பெலகாவி-480, பாகல்கோட்-345, ராமநகரம்-279, சித்ரதுா்கா-286, கதக்-267, ராய்ச்சூரு-261, தாவணகெரே-257, பீதா்-250, சிக்கமகளூரு-244, விஜயபுரா-223, ஹாவேரி-184, யாதகிரி-130. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,92,496-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 67,236 போ் வியாழக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 32,87,711 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,87,754 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 49 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,754 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 20.04 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT